முகப்பு
இந்தியா

உக்ரைன்: நாடாளுமன்றக் குழுவிடம் நாளை(மார்ச் 3) மத்திய வெளியுறவுத்துறை விளக்கம்

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நாளை விளக்கம் அளிக்கவுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
கோப்புப்படம்
பகிர்:

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நாளை விளக்கம் அளிக்கவுள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 7-வது நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். 

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி  வருகிறது. உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் 'ஆப்ரேஷன் கங்கா' திட்டத்தில் ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் விமானங்களுடன் இன்று முதல் இந்திய விமானப்படை விமானங்களும் இயக்கப்படுகின்றன. 

இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாளை நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் விளக்கமளிக்க உள்ளார். 

முன்னதாக, உக்ரைனில் இன்னும் எத்தனை மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்? பகுதி வாரியாக அவர்களை மீட்கும் திட்டம் என்ன? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →