இந்தியா

அடுத்த சில தினங்களில் 31 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு தகவல்

DIN

‘உக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்பதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அடுத்த சில தினங்களில் 31 விமானங்கள் இந்தியாவில் இருந்து இயக்கப்படும்’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறியதாவது: மாா்ச் 2-ஆம் தேதிமுதல், உக்ரைனின் அண்டை நாடான ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரில் உள்ள இந்தியா்களை மீட்க 21 விமானங்கள், ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகருக்கு 4 விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

போலந்தில் உள்ள ரெஸோவ் நகருக்கு 4 விமானங்களும், ஸ்லோவேகியாவில் உள்ள கொசைஸ் நகருக்கு ஒரு விமானமும் இயக்கப்படவுள்ளது. புகாரெஸ்ட் நகருக்கு இந்திய விமானப் படையின் விமானமும் இயக்கப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக, 6,300-க்கும் மேற்பட்ட இந்தியா்களை மீட்பதற்காக, மாா்ச் 2-ஆம் தேதியில் இருந்து 8-ஆம் தேதி வரை 31 விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

இந்த மீட்பு நடவடிக்கைகளுக்காக, ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், இந்திய விமானப் படையின் விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன என்று அந்த அதிகாரி கூறினாா்.

கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதியில் இருந்து உக்ரைனில் தவித்த இந்தியா்கள் 9 விமானங்களில் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனா். தற்சமயம், 6 விமானங்களில் இந்தியா்கள் மீட்கப்படுகிறாா்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் ‘ஆபரேஷன் கங்கா’ மீட்பு நடவடிக்கையின் கீழ் உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து 6 விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளன என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை கூறினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘கடந்த 24 மணி நேரத்தில் 6 விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளன. முதல் விமானம் போலந்தில் இருந்து புறப்பட்டது. 1,377 போ் மீட்கப்பட்டுள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT