இந்தியா

உக்ரைனிலிருந்து 60 மத்தியப் பிரதேச மக்கள் தாயகம் திரும்பினர்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 60 பேர் உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பியுள்ளதாக அமைச்சர் ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார். 

DIN

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 60 பேர் உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பியுள்ளதாக அமைச்சர் ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், 

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நபர்களின் குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகொள்ளுமாறு, அனைத்து மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளருக்கு மத்தியப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. 

உக்ரைனில் சிக்கியுள்ள 193 மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வர் ஹெல்ப்லைன் மற்றும் பிற வழிகள் மூலம் மாநில அரசைத் தொடர்பு கொண்டனர். 

அவர்களில் 60 பேர் பத்திரமாக மாநிலம் திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டோம். அவர்கள் அனைவரும்  விரைவில் வீடு திரும்புவார்கள் என்று மிஸ்ரா தெரித்தார். 

மேலும், செவ்வாயன்று, போபாலில் 9 மாணவர்கள், குவாலியரில் இருந்து தலா இருவர் மற்றும் ஜபல்பூர், இந்தூர், சிந்த்வாரா, ரத்லம் மற்றும் நர்மதாபுரத்தில் இருந்து தலா ஒருவர்  வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: ஜவாஹிருல்லா

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

SCROLL FOR NEXT