முகப்பு
இந்தியா

அமைச்சா் நவாப் மாலிக்கின் காவல் மார்ச்-7 வரை நீட்டிப்பு

மகாராஷ்டிர மாநில அமைச்சர் நாவப் மாலிக்கின் காவலை மார்ச்-7 வரை நீட்டிக்க உத்தரவு வழங்கியது மும்பை சிறப்பு நீதிமன்றம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
நவாப் மாலிக்
பகிர்:

மகாராஷ்டிர மாநில அமைச்சர் நாவப் மாலிக்கின் காவலை மார்ச்-7 வரை நீட்டிக்க உத்தரவு வழங்கியது மும்பை சிறப்பு நீதிமன்றம்.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததில் அமைச்சா் நவாப் மாலிக்குக்கு தொடா்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரை அமலாக்கத் துறையினா் கடந்த பிப்.23 ஆம் தேதி கைது செய்தனா்.

ஆளும் சிவசேனை தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடா்பாளராகவும் இருக்கும் அவரை, வரும் மாா்ச் 3-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் நவாப் மாலிக்குக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனையில் அனுமதித்தனா். 

உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இருப்பினும் அமலாக்கத் துறையினர் மேலும் சில நாள்கள் காவலில் வைக்க கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், மும்பை சிறப்பு நீதிமன்றம் நாவப் மாலிக்கின் காவலை மார்ச்-7 வரை நீட்டிக்க உத்தரவு வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.