இந்தியா

உக்ரைனிலிருந்து 5,245 இந்தியர்கள் மீட்பு: மத்திய அரசு

DIN

உக்ரைனிலிருந்து விமானங்கள் மூலம் நேற்று (மார்ச்-3)  வரை 5,245 இந்தியர்களை மீட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 9-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அந்தவகையில், உக்ரைனில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. 

இந்தியர்களை மீட்கும் பணியான ஆப்பரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மூன்று சி-17 விமானங்கள் நேற்றிரவு 630 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ரோமானியா, ஹங்கேரியில் உள்ள வழியாக வந்தடைந்தது. 

கடந்த 3 நாட்களில் ஒவ்வொரு விமானத்திலும் 200 இந்தியர்கள் என ஏழு விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

இந்நிலையில், நேற்று (மார்ச்-3) வரை உக்ரைனிலிருந்து 5,245 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT