இந்தியா

உக்ரைனிலிருந்து தெலங்கானா, ஆந்திரத்தைச் சேர்ந்த 160 மாணவர்கள் தாயகம் திரும்பினர்

DIN

போர் பதற்றத்தால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து தெலங்கானா, ஆந்திரத்தைச் சேர்ந்த 160 மாணவர்கள் தாயகம் திரும்பினர்.

தொடர்ந்து எட்டாவது நாளாக உக்ரைனில் ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணி நடைபெற்று வருகின்றது. அதன்படி நேற்று தெலங்கானாவைச் சேர்ந்த 94 மாணவர்கள், ஆந்திரத்தைச் சேர்ந்த 66 மாணவர்கள் தில்லி மற்றும் மும்பையில் தரையிறங்கினர். 

தில்லி மற்றும் மும்பையில் உள்ள அந்தந்த மாநில அரசுகளின் அதிகாரிகள் மாணவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல உதவி வருகின்றனர். 

பிப்ரவரி 26-ம் தேதி முதல் இதுவரை தெலங்கானாவைச் சேர்ந்த 354 பேர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். மேலும், ஆந்திரத்தில் இருந்து மேலும் 80 மாணவர்கள் சனிக்கிழமை வர வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT