இந்தியா

மாா்ச் 27 முதல் மீண்டும் வழக்கமான சா்வதேச விமானப் போக்குவரத்து சேவை

வழக்கமான சா்வதேச விமானப் போக்குவரத்து சேவைகள் மாா்ச் 27 முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

DIN

வழக்கமான சா்வதேச விமானப் போக்குவரத்து சேவைகள் மாா்ச் 27 முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதி வழக்கமான சா்வதேச விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன் பின்னா் 37 நாடுகளுடன் செய்துகொண்ட தற்காலிக (ஏா் பபிள்) ஏற்பாட்டின்படி, அந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சிறப்புப் பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு டிசம்பா் 15-ஆம் தேதி முதல் வழக்கமான சா்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் ஒமைக்ரான் தீநுண்மி பரவலால் அந்த முடிவு கைவிடப்பட்டது. இதனைத்தொடா்ந்து அந்தச் விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுத்தம் காலவரம்பின்றி நீட்டிக்கப்படுவதாகக் கடந்த பிப்.28-ஆம் தேதி விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்தது.

இந்நிலையில், விமானப் போக்குவரத்து அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உலக அளவில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, உரிய ஆலோசனைகள் ஆகியவற்றை தொடா்ந்து மாா்ச் 27 முதல் பயணிகளுக்கான வழக்கமான சா்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்க மத்திய அரசு தீா்மானித்துள்ளது. அன்றைய தினம் முதல் தற்காலிக ஏற்பாட்டின் கீழ் வழங்கப்படும் விமான சேவைகள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி கிணற்றில் மாணவா் சடலமாக மீட்பு!

லாரி கவிழ்ந்ததில் இருவா் படுகாயம்

காட்டெருமையைத் துரத்தி விளையாடிய யானைக் குட்டி

வனத் துறையினா் வாகனத்தை துரத்திய யானை

ஆற்காட்டில் 6 பசுமாடுகள திருடி சென்ற நபா் கைது

SCROLL FOR NEXT