இந்தியா

உன்னாவ் பெண்ணின் தாய்க்கு பின்னடைவு; பாஜக முன்னிலை

IANS


புது தில்லி: உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் உன்னவ் தொகுதியில்  காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட உன்னாவ் பெண்ணின் தாய் ஆஷா சிங் மிகக் குறைவான வாக்குகளே பெற்றுள்ளார்.

உன்னாவ் தொகுதியல் இதுவரை நடந்து முடிந்த 10 சுற்று வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் 438 வாக்குகள் மட்டுமே ஆஷா சிங்குக்கு கிடைத்துள்ளது. பாஜக வேட்பாளர் பங்கச் குப்தாவுக்கு 42,021 வாக்குகளும், சமாஜ்வாதி வேட்பாளர்அபினவ் குமாருக்கு 30,612 வாக்குகளும் கிடைத்துள்ளன.

உன்னாப் பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், உன்னாவ் பெண்ணின் தாய் அந்தத் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், அவருக்கு நோட்டாவை விடவும் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT