பிரகாஷ் சிங் பாதல் | சுக்பீர் சிங் பாதல் 
இந்தியா

பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் தலைவர்கள் அதிர்ச்சித் தோல்வி

சிரோமணி அகாலி தளக் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஜலாலாபாத் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். 

DIN

சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஜலாலாபாத் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். 

அதுபோன்று பஞ்சாப் மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவரும் சிரோமணி அகாலி தளத் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலும் தான் போட்டியிட்ட லம்பி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். 

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது

இதில் பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் ஆம் ஆத்மி பஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்கிறது. 

காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சியின் முக்கிய தலைவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். காங்கிரஸின் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் தோல்வியைத் தழுவியுள்ளனர். 

சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஜலாலாபாத் தொகுதியில், ஆம் ஆத்மி வேட்பாளர் ஜெக்தீப் கம்போஜிடம் தோல்வியுற்றார். 

சுக்பீர் சிங்கின் தந்தையும் பஞ்சாபில் ஐந்து முறை முதல்வராக இருந்தவருமான பிரகாஷ் சிங் பாதலும், தான் போட்டியிட்ட லம்பி தொகுதியில் தோல்வியுற்றார். 

பஞ்சாபில் தந்தை, மகன் இருவருமே தோல்வியைத் தழுவியுள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரு - தூத்துக்குடி, கொல்லத்துக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்!

ஒரே நேரத்தில் வாகனங்கள் பயணித்ததால் திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல்

விசைத்தறி தொழிலாளா்களுக்கு 10% போனஸ்

போலியோ முகாம்: 7.82 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து!

காலாவதியான மருந்துகளை திறந்தவெளியில் கொட்டினால் நடவடிக்கை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT