சுமியில் சிக்கித் தவித்த 242 இந்தியர்கள் தில்லி திரும்பினர்
போர் பதற்றத்தினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து 242 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் போலந்தில் இருந்து தில்லி வந்தடைந்தது.
போர் பதற்றத்தினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து 242 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் போலந்தில் இருந்து தில்லி வந்தடைந்தது.
நாடு திரும்பிய பெரும்பாலான இந்தியக் குடிமக்கள் வடகிழக்கு உக்ரைனிய நகரமான சுமியைச் சேர்ந்தவர்கள். கடந்த பல நாட்களாக ரஷியர்களுக்கும் உக்ரைனியப் படைகளுக்கும் இடையே கடுமையான தாக்குதல்கள் மற்றும் தீவிரத் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகின்றது.
உக்ரைனின் சுமி நகரத்தில் சிக்கியுள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெறியேற்றும் பணிகளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் அப்ரேஷன் கங்கா அடிப்படையில் சுமியில் சிக்கிய 242 இந்தியர்கள் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டனர்.
Advertisement
Advertisement
போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் சிக்கித் தவித்த 20,000 மேற்பட்ட குடிமக்களை இந்தியா இதுவரை மீட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.