மாயாவதி 
இந்தியா

உ.பி.தேர்தல் தோல்வி எங்களுக்கு ஒரு பாடம்: மாயாவதி

உத்தரப் பிரதேச தேர்தல்  தோல்வி எங்களுக்கு ஒரு பாடம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

DIN

உத்தரப் பிரதேச தேர்தல்  தோல்வி எங்களுக்கு ஒரு பாடம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

நடந்த முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் தவிர்த்து உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக வென்றுள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் அதிக சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச தேர்தல் தோல்வி எங்களுக்கு ஒரு பாடம் என்றும் தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் எதிராக இருப்பதாகவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் ‘2017-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் பாஜக எந்த நிலைமையில் இருந்ததோ அந்த நிலைமைக்கு தற்போது காங்கிரஸ் தள்ளப்பட்டுவிட்டது. பகுஜன் சமாஜ் பாஜகவின் ‘பி டீம்’ எனப் பொய் பிரசாரம் செய்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்’ எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT