இந்தியா

3டி தொழில்நுட்பத்தில் 4 வாரங்களில் கட்டி முடித்த 2 வீடுகள்: ராணுவ பொறியாளர்கள் அசத்தல்

DIN

குஜராத் மாநிலம் காந்தி நகரில் 3டி தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி ராணுவ பொறியாளர்கள் 4 வாரங்களில் இரண்டு வீடுகளைக் கட்டி முடித்து அசத்தியுள்ளனர். 

சென்னையைச் சேர்ந்த டிவாஸ்டா (Tvasta) நிறுவனத்தின் உதவியுடன் இந்திய ராணுவம் இதனை செய்து முடித்துள்ளது.

ராணுவ வீரர்கள் முகாமிட்டு தங்கி வருவதைப்போன்று, அதிக அளவிலான ராணுவ வீரர்கள் தங்கும் வகையில் ராணுவப் பொறியியல் சேவையைச் சேர்ந்த பொறியாளர்கள் குறைந்த கால அளவில் வீடுகளைக் கட்டி முடித்துள்ளனர். 

குஜராத் மாநிலம் காந்தி நகரின் தென்மேற்கு ராணுவ தளத்தில் 3 டி தொழில் நுட்பத்தின் ரேபிட் கட்டுமான முறையைப் பயன்படுத்தி, இரண்டு கட்டடங்களை ராணுவத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் கட்டி முடித்துள்ளனர். 

700 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த வீடுகள் இரண்டு வாரங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த முறையைப் பயன்படுத்தி முதல் முறை வீடுகள் கட்டப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT