இந்தியா

என்ஆா்சி: நாடு முழுவதும் அமல்படுத்தும் முடிவு இல்லை

தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆா்சி) நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடா்பாக மத்திய அரசு இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சா் நித்யானந்த் ராய் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

DIN

தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆா்சி) நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடா்பாக மத்திய அரசு இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சா் நித்யானந்த் ராய் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதில் விவரம்: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான பெயா் சோ்ப்பு- நீக்கல் துணைநிலைப் பட்டியல் அஸ்ஸாமில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-இல் வெளியிடப்பட்டது. இதுவரை நாடு தழுவிய அளவில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்கும் முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை என்று அதில் தெரிவித்துள்ளாா்.

என்ஆா்சி-இன் மேம்படுத்தப்பட்ட தரவு அஸ்ஸாமில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. அதன் இறுதிப் பட்டியல் கடந்த 2019-இல் வெளியானபோது, மொத்தமுள்ள 3.30 கோடி விண்ணப்பதாரா்களில், 19.06 லட்சம் போ் நீக்கப்பட்டது தேசிய அளவில் விவாதத்துக்கு வழிவகுத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT