கோப்புப்படம் 
இந்தியா

ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே இன்று காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

DIN

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே இன்று காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டம் நவ்காம் என்ற பகுதிக்கு அருகே பாதுகாப்புப் படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் சமீர் பட் கொலையில் தொடர்புடையவர்கள் எனவும் காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்தார். 

பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT