இந்தியா

ஹிஜாப் தீர்ப்பு: உடுப்பியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு; 144 தடை உத்தரவு அமல்

ஹிஜாப் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு உடுப்பியில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. 

DIN

ஹிஜாப் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு உடுப்பியில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. 

கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவரக் கூடாது என்று தடை விதித்ததையடுத்து அங்கு பெரும் சர்ச்சை போராட்டங்கள் வெடித்தன. 

இதுதொடர்பான வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றம், வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து மாநில அரசு பிறப்பித்திருந்த சீருடை உத்தரவு செல்லும் என செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. மேலும், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மத வழக்கம் அல்ல என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். 

இதையடுத்து உடுப்பியில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஹிஜாப் விவகாரத்தில் முன்னதாக, உடுப்பியில் போராட்டம் வெடித்ததை அடுத்து, அங்கு வருகிற மார்ச் 21 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டம், கூட்டங்கள், விழாக்கள் எதுவும் நடத்தக்கூடாது என்று உடுப்பி துணை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். 

உடுப்பியில் 144 தடை உத்தரவையடுத்து அங்கு பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை: ஆஸி.க்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்!

மனோஹரிதா... ருக்மிணி வசந்த்!

கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது... ஹெபா படேல்!

தங்கம் விலை உயர்வு... மௌனி ராய்!

பிக் பாஸ் அதிரடி முடிவு! துஷார் தலைவர் பதவி பறிப்பு!!

SCROLL FOR NEXT