முகப்பு
இந்தியா

மணிப்பூரில் பாஜக அரசுடன் இணைய தயார்: மேகாலயா முதல்வர்

மேகாலயா முதல்வரும், தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) தலைவருமான கான்ராட் கே. சங்மா இன்று, மணிப்பூரில் பாஜக

Updated On : 16 மார்ச் 2022, 4:34 pm IST
மேகாலய முதல்வர் கான்ராட் கே. சங்மா.
பகிர்:

ஷில்லாங்/இம்பால்: மேகாலயா முதல்வரும், தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) தலைவருமான கான்ராட் கே. சங்மா இன்று, மணிப்பூரில் பாஜக தலைமையிலான ஆட்சியில் இணைய தனது கட்சி தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

மணிப்பூரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி(என்பிபி) 7 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவில் கசப்பு ஏற்பட்டு, இருவரும் ஒருவரையொருவர் பல்வேறு விஷயங்களில் குற்றம் சாட்டினர்.

என்பிபி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இணைய தயாராக இருப்பதாகவும், அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜகவை ஆதரிப்பதாகவும், மேகாலயாவில் இணைந்து செயல்படுவதாகவும் சங்மா கூறினார்.

Advertisement

Advertisement

மணிப்பூர் அரசுடன் இணைய பாஜக தங்களை அழைத்தால், சேரத் தயாராக இருக்கிறோம். அவர்கள் அழைக்கவில்லை என்றால், இதைப்பற்றி  பின்னர் ஆராய்வோம் என்று என்.பி.பி. தேசியத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.