லக்கிம்பூர் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உத்தரப் பிரதேச அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்தாண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது மத்திய மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கார் ஏற்றியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த விவகாரத்தை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு ஆஷிஷ் மிஸ்ரா குற்றவாளி என வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முக்கிய குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கியது.
இதற்கிடையே, ஆஷிஷ் மிஸ்ரா ஜாமினில் வெளிவந்த சில நாள்களிலேயே முக்கிய சாட்டி தாக்கப்பட்டதால் ஜாமினை ரத்து செய்யக்கோரி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உத்தரப் பிரதேச அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.
மேலும், முக்கிய சாட்டியாக கருதப்படும் நபருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.