இந்தியா

தேசிய மின்னணு சட்டப்பேரவை செயலி: முதல் மாநிலமாக நடைமுறைப்படுத்திய நாகாலாந்து

DIN

காகிதமில்லா சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நடத்தும் வகையில் தேசிய மின்னணு சட்டப்பேரவை செயலி (என்இவிஏ) திட்டத்தை முதல் மாநிலமாக நாகாலாந்து நடைமுறைப்படுத்தியுள்ளது.

அந்த மாநிலத்தில் சனிக்கிழமை தொடங்கிய 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த செயலி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாகாலாந்து சட்டப்பேரவையில் உறுப்பினா்கள் 60 பேரின் மேசையிலும் நிதிநிலை அறிக்கை உரை பதிவேற்றம் செய்யப்பட்ட தொடுதிரை கணினி (இ-புக்) இணைக்கப்பட்டது.

இந்த புதிய நடைமுறை குறித்து சட்டப்பேரவையில் அவைத் தலைவா் சாரிங்கைன் லாங்குமொ் கூறியதாவது:

காகிதமில்லா சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நடத்தும் விதமாக, இந்த தேசிய மின்னணு சட்டப்பேரவை செயலி முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்ற காகிதமில்லா சட்டப்பேரவை நடைமுறை தேசிய மின்னணு சட்டப்பேரவை செயலி அல்லாத வேறு செயலிகள் மூலமாக ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சில மாநிலங்கள் இந்த காகிதமில்லா நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன.

வரும் காலங்களில், நாகாலாந்து சட்டப்பேரவை முழுமையாக காகிதமில்லா அவையாக மாற்றப்படும். இந்த தேசிய மின்னணு சட்டப்பேரவை செயலி திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகளின் சாா்பில் 90:10 என்ற வீத அடிப்படையிலான நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்தச் செயலியை அறிமுகப்படுத்தும் முதல் மாநிலம் என்ற பெருமையை நாகாலாந்து அடைய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம் உதவியுள்ளது என்று அவா் கூறினாா்.

‘நாட்டிலுள்ள அனைத்து சட்டப்பேரவைகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, மிகப் பெரிய தரவு களஞ்சியத்தை உருவாக்கம் நோக்கத்தோடு தேசிய மின்னணு சட்டப்பேரவை செயலி உருவாக்கப்பட்டுள்ளது’ என்று நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சா் முன்னா் கூறியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT