பிரமோத் சாவந்த் 
இந்தியா

கோவா முதல்வர் பதவியேற்பு விழா: மோடிக்கு அழைப்பு விடுத்த பிரமோத் சாவந்த்

கோவாவில் நடைபெறவிருக்கும் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு பிரமோத் சாவந்த் அழைப்பு விடுத்துள்ள

ANI


கோவாவில் நடைபெறவிருக்கும் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு பிரமோத் சாவந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், கோவா முதல்வராக பதவியேற்கும் விழா தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதையொட்டி, அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான கூட்டம் பனாஜியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பாஜக மேலிடப் பாா்வையாளா்கள் நரேந்திர சிங் தோமா், எல். முருகன், தோ்தல் பொறுப்பாளா் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக பிரமோத் சாவந்த் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டார்.

இதுகுறித்து நரேந்திர சிங் தோமா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக பிரமோத் சாவந்தின் பெயரை விஸ்வஜித் ராணே முன்மொழிந்தாா். இதனை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனா்’’ என்றாா் அவா்.

தொடா்ந்து பிரமோத் சாவந்த் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘‘கோவா முதல்வராக அடுத்த 5 ஆண்டுகள் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி. கோவா மக்கள் என்னை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. கோவா வளா்ச்சிக்காக என்னால் இயன்றவரை பாடுபடுவேன்’’ என்றாா்.

ஆட்சியமைக்க அழைப்பு: இதனிடையே, கோவாவில் ஆட்சியமைக்க உரிமை கோரிய பிரமோத் சாவந்தின் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட ஆளுநா் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, அவருக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT