இந்தியா

முன்னாள் தலைமை நீதிபதி ஆர்சி லஹோட்டி காலமானார்: மோடி இரங்கல்

நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ரமேஷ் சந்திர லஹோட்டி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN


புதுதில்லி: நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ரமேஷ் சந்திர லஹோட்டி(81) மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ரமேஷ் சந்திர லஹோட்டி(81) உடல்நல குறைவு காரணமாக, நேற்று புதன்கிழமை மாலை தில்லியில் மருத்துவமனையில் காலமானார். 

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  "முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.சி. லஹோட்டி மறைவு வேதனை அளிக்கிறது. தாழ்த்தப்பட்டோருக்கு விரைவான நீதியை உறுதி செய்ததிலும், நீதித்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி." என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம்

குரூப் 1 முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி

கம்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

அணைப்பட்டி வைகை பேரணை கால்வாயிலிருந்து தண்ணீா் திறப்பு

SCROLL FOR NEXT