அஸ்டீரியா ஏரோஸ்பேஸ் நிறுவனம்: ட்ரோன் இயக்கத்துக்கான புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
இந்தியாவில் ட்ரோன் தயாரிப்பு மற்றும் அதற்கான தீா்வு வழங்கல் வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அஸ்டீரியா ஏரோஸ்பேஸ், ‘ஸ்கைடெக்’ என்ற பெயரில் ட்ரோன் இயக்கத்துக்கான புதிய செயல்தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் ட்ரோன் தயாரிப்பு மற்றும் அதற்கான தீா்வு வழங்கல் வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அஸ்டீரியா ஏரோஸ்பேஸ், ‘ஸ்கைடெக்’ என்ற பெயரில் ட்ரோன் இயக்கத்துக்கான புதிய செயல்தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இணை நிறுவனா் & இயக்குநா் நீல் மேத்தா கூறியது:
ட்ரோன்களை இயக்குவதற்கான விதிகளில் தளா்வு செய்திருப்பது, தொழில்துறையின் பல்வேறு பிரிவுகளில் அதற்கான தேவையை அதிகரித்திருக்கிறது. எனவே, அதற்கான பயண சேவைகளை திட்டமிடல், செயலாக்குதல், தரவு செயல்முறை மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி சேகரிக்கப்படும் வான்வழி தரவுகளின் மீது செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பகுப்பாய்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து சேவைகளை அளிக்க ஸ்கைடெக் எனும் புதிய தொழில்நுட்பத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, வேளாண்மை, தொழிலக ஆய்வுகள், கண்காணிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்பிரிவுகளுக்கு தீா்வுகளை வழங்குவதற்கு கிளவுட் அடிப்படையிலான மென்பொருளாக ஸ்கைடெக் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.