இந்தியா

நாட்டில் மேலும் புதிதாக 1,685 பேருக்குத் தொற்று: 2,499 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 1,685 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 83 பேர் உயிரிழந்தனர்.

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 1,685 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 83 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் புதிதாக 1,685 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,30,16,372 ஆக உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 83 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,16,775-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20 சதவிகிதமாக உள்ளது. 

நேற்று ஒரேநாளில் 2,499 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,24,78,087 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.75 சதவிகிதமாக உள்ளது. 

தற்போது 21,530 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.05 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 2.07 சதவிகிதமாகவும், சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.47 சதவிகிதமாகவும், வராந்திர தொற்று பாதிப்பு விகிதம் 0.35 சதவிகிதமாகவும், தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.29 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. 
 
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 182.55 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 29,82,451 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 78,49,52,800 (78.4 கோடி) கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,61,954 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழகும் பஞ்சவர்ணக் கிளிகள்!

காஸா போர் நிறுத்தத்திற்கு எதிராக வாக்களித்த அமெரிக்கா! உலக நாடுகள் கண்டனம்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.11ஆக நிறைவு!

தனுஷ் குரலில்... ரெட்ட தல முதல் பாடல்!

எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயண தேதி மாற்றம்

SCROLL FOR NEXT