இந்தியா

'மோடி ஸ்டோரி': பிரதமர் மோடியைப் பற்றி மனம் திறக்கும் பிரபலங்கள்

PTI


பிரதமர் நரேந்திர மோடியுடன் பயணித்தவர்கள், சந்தித்தவர்கள் அவருடனான தங்களது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து, மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

மோடி ஸ்டோரி (modistory.in) இணையதளத்தில், ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்டோர், பிரதமர் மோடியுடனான தங்களது சந்திப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த இணையதளத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ஏராளமான புகைப்படங்களும், அவரை சந்தித்தவர்களின் அனுபவங்களும் பகிரப்பட்டுள்ளன.

இந்த இணையதளம் குறித்து ஏராளமான பாஜகவினரும் மத்திய அமைச்சர்களும் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

மோடி ஸ்டோரி என்பது பிரதமர் மோடியின் வாழ்க்கையிலிருந்து எழுச்சியூட்டும் தருணங்களைச் சேகரிப்பதற்காக ஒரு தன்னார்வ இயக்கமாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும், பிரதமராக அவர் பதவியேற்ற பிறகு, தங்களது வாழ்க்கைப் பயணத்தில் பிரதமரை சந்தித்தவர்கள், அவர்களுக்குக் கிடைத்த அனுபவத்தை மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் எழுச்சியூட்டும் வகையில் விடியோ/ஆடியோ/எழுத்து வடிவில் இந்த இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி சுமித்ரா காந்தி குல்கர்னியால் தொடங்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி சைனிக் பள்ளியில் சேர்ந்து பயில வேண்டும் என்று மிகவும் விரும்பியதாக அவரது பள்ளி ஆசிரியர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். நாட்டில் அவசரநிலை நடைமுறைப்படுத்தப்பட்ட போது மோடியுடனான அனுபவம் குறித்து அவரது பக்கத்துவீட்டுக்காரர் தனது அனுபவத்தை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT