இந்தியா

பயங்கரவாதத்திற்கு எதிராக பிம்ஸ்டெக் நாடுகள் இணைய வேண்டும்: எஸ்.ஜெய்சங்கர்

DIN

பயங்கரவாதத்திற்கு எதிராக பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கொழும்பு நகரில் நடைபெறும் 18வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசினார்.

இது தொடர்பாக அவர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் அளவிலான உச்சி மாநாடு ஆக்கபூர்வமாகவும் ஒத்திசைவாகவும் நிறைவு பெற்றது.

பயங்கரவாதம், தீவிரவாத வன்முறை, சைபர் தாக்குதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் கூட்டாக எதிர்க்க வேண்டும்.

வணிக ஒத்துழைப்பு, துறைமுக வசதிகள், படகு சேவைகள், கடலோர கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இதில், இலங்கை, இந்தியா, வங்கதேசம், பூடான், தாய்லாந்து, நேபாளம் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் காணொலி வாயிலாக கலந்துகொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT