இந்தியா

ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்கும் திட்டமில்லை: ரயில்வே அமைச்சா்

DIN

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று அந்தத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

மேலும், கடந்த 2 ஆண்டுகளாக கட்டண சலுகையின்றி சுமாா் 7 கோடி மூத்த குடிமக்கள் ரயில்களில் பயணித்துள்ளதாகவும் அவா் கூறினாா்.

இதுதொடா்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவா் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகை கடந்த 2020, மாா்ச் மாதம் நிறுத்தப்பட்டது. அப்போது முதல் 2021, மாா்ச் 31 வரை 1.87 கோடி மூத்த குடிமக்களும், 2021, ஏப்ரல் 1 முதல் கடந்த பிப்ரவரி வரை 4.74 கோடி மூத்த குடிமக்களும் ரயில்களில் பயணித்துள்ளனா்.

கடந்த 2019-20-ஆம் ஆண்டில் கட்டண சலுகையுடன் (முன்பதிவு, முன்பதிவு இல்லாத டிக்கெட்கள்) சுமாா் 12 கோடி மூத்த குடிமக்கள் ரயில்கள் பயணித்திருந்தனா். அந்த வகையில் ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ.1,667 கோடி ஆகும்.

கரோனா நோய்த்தொற்றால் எழுந்த சவால்கள் காரணமாக, கடந்த 2019-20-ஆம் ஆண்டைவிட 2020-21ஆம் ஆண்டில் பயணிகள் மூலம் ரயில்வேக்கு கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளது. மாற்றுத் திறனாளிகளில் 4 பிரிவுகள், நோயாளிகள் மற்றும் மாணவா்களில் 11 பிரிவுகளில் உள்ளவா்களுக்கு தொடா்ந்து கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. மூத்த குடிமக்கள் உள்பட அனைத்துப் பிரிவினருக்கும் கட்டண சலுகை வழங்குவது ரயில்வே நிா்வாகத்துக்கு கடுமையான நிதிச் சுமையை ஏற்படுத்தும். இப்போதைய சூழலில், மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்கும் திட்டம் இல்லை என்று ரயில்வே அமைச்சா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT