இந்தியா

சோனியா காந்தியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

DIN

தில்லி சென்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேசினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் சோனியா காந்தி - மு.க. ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றுள்ளது. திமுக அலுவலகத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த போது, அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தந்தார்.

அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின். இரு தலைவர்களும் அங்கு சந்தித்துப் பேசினர்.  பிறகு, நாடாளுமன்ற மைய மண்டபத்தில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும் மு.க. ஸ்டாலின் சந்தித்து உரையாற்றினார்.

இன்னும் சற்று நேரத்தில் பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசவிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தில்லி பயணம் குறித்து ஸ்டாலின் முன்னதாக தெரிவித்திருந்ததாவது, 

அமீரகப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், அடுத்த பயணம் இந்தியாவின் தலைநகா் புதுதில்லியை நோக்கி அமைகிறது. தில்லிக்குச் சென்று, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்கவுள்ளேன்.

மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோரை வெள்ளிக்கிழமை சந்திக்க இருக்கிறேன்.

உரிமைகளுக்கான சந்திப்பு: தமிழ்நாட்டில் திமுக அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தர வேண்டிய வரி வருவாய், மழை - வெள்ள நிவாரணத் தொகை உள்ளிட்ட நம்முடைய மாநில உரிமைகளுக்கான சந்திப்பு இது. அதனைத் தொடா்ந்து இந்திய அரசியல் தலைவா்களுடனான சந்திப்பும் நடைபெற இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT