இந்தியா

காஷ்மீரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு செயலிழப்பு

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மறைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த ஐஇடி வெடிகுண்டை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து இன்று செயலிழக்கச் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

DIN

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மறைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த ஐஇடி வெடிகுண்டை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து இன்று செயலிழக்கச் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

ராஜ்போரா சாலையில் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு, வெடிகுண்டு செயலிழப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு, சக்திவாய்ந்த வெடிகுண்டு வெற்றிகரமாக செயலிழக்கச் செய்தனர்.

இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.87.82 ஆக நிறைவு!

இம்ரான் கானின் விடுதலைக்காக நாடு தழுவிய போராட்டம்! ராணுவப் படைகள் குவிப்பு.. 500 பேர் கைது!

SCROLL FOR NEXT