முகப்பு
இந்தியா

14 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: ராஜ் தாக்கரேவுக்கு எதிராக பிடியாணை

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்ட நீதிமன்றம், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு எதிராக பிணையில் விடுதலையாத முடியாத பிடியாணையை பிறப்பித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:09 AM
14 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: ராஜ் தாக்கரேவுக்கு எதிராக பிடியாணை
பகிர்:

சாங்லி: மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்ட நீதிமன்றம், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு எதிராக பிணையில் விடுதலையாக முடியாத பிடியாணையை பிறப்பித்துள்ளது.

2008ஆம் ஆண்டு அவதூறாக பேசிய வழக்கில், ராஜ் தாக்கரே மீது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 109 மற்றும் 117-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் கீழ், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின் பிடியாணை பிறப்பித்திருக்கும் நீதிமன்றம், ஜூன் 8ஆம் தேதிக்குள் ராஜ் தாக்கரே உள்ளிட்டோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றும் விவகாரத்தில் ராஜ் தாக்கரே மகாராஷ்டிர அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை தூசுதட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.