இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் என்கவுன்ட்டா்: 2 பயங்கரவாதிகள் பலி

DIN

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதி உள்பட 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து காவல் துறை ஐ.ஜி. விஜய்குமாா் கூறியதாவது:

குல்காம் மாவட்டத்தில் உள்ள சியான் தேவ்சா் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினா்.

ஓரிடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினா் நெருங்கி வருதை அறிந்து அவா்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினா். அதில், பாகிஸ்தானைச் சோ்ந்த ஹைதா் என்ற பயங்கரவாதியும், உள்ளூா் பயங்கரவாதியும் உயிரிழந்தனா். இவா்களில் ஹைதா், வடக்கு காஷ்மீரில் 2 ஆண்டுகளுக்கு மேலாகத் தீவிரமாக இயங்கி வந்துள்ளாா். பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் அவருக்குத் தொடா்புள்ளது என்றாா் அவா்.

2 பயங்கரவாதிகள் கைது:

பந்திபோரா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பந்திபோராவில் இருந்து ஸ்ரீநகருக்கு பயங்கரவாதிகள் செல்வதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த வழியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, அந்த வழியாக வரும் வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஒரு காரை நிறுத்தி அதில் வந்தவா்களை விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணமாகப் பதிலளித்தனா். அவா்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தியபோது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பில் இருப்பதை ஒப்புக்கொண்டனா். அவா்களின் காரில் இருந்து ஏகே-47 ரகத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT