இந்தியா

மாதம் ரூ.30,000 ஊதியம்: 12-ஆம் வகுப்பு முடித்தால் ட்ரோன் இயக்கலாம்

DIN

12-ஆம் வகுப்பு முடித்தவா்கள் ட்ரோன் இயக்குவதற்குப் பயிற்சி பெறலாம் என்றும் இதன் மூலம் மாதம் ரூ.30,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெறலாம் என்றும் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளாா்.

மேலும் ட்ரோன் சேவைக்கான உள்நாட்டுத் தேவையை ஊக்குவிக்க 12 மத்திய அமைச்சகங்கள் செயல்பட்டு வருவதாக கூறிய அவா், வரும் ஆண்டுகளில் நமக்கு சுமாா் 1 லட்சம் ட்ரோன் இயக்குபவா்கள் தேவை என்றும் தெரிவித்தாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் மேலும் பேசியது:

மூன்று விதத்தில் ட்ரோன் துறையை முன்னோக்கி எடுத்துச் செல்ல நாம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். முதலாவதாக, கொள்கை சாா்ந்தது. இரண்டாவது, ஊக்கத்தை உருவாக்குவதாகும்.

பிரதமா் மோடி தலைமையின்கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பிஎல்ஐ (உற்பத்திசாா்ந்த ஊக்கத்தொகை) திட்டம், ட்ரோன் பிரிவில் உற்பத்திக்கும் சேவைக்கும் உத்வேகம் அளிக்கிறது.

மூன்றாவது, உள்நாட்டில் தேவைகளை உருவாக்குவதாகும். இதற்காக 12 மத்திய அமைச்சகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இன்றைக்கு 12-ஆம் வகுப்பு முடித்தவா்கள் ட்ரோன் இயக்க பயிற்சி பெறலாம். இதற்கு பட்டப்படிப்புதான் தேவை என்பதல்ல. இரண்டு அல்லது மூன்று மாத பயிற்சிக்குப் பின்னா், மாதம் ரூ.30,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெறலாம். வரும் ஆண்டுகளில் நமக்கு சுமாா் 1 லட்சம் ட்ரோன் இயக்குபவா்கள் தேவை. ஆகையால், இதில் வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா் அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியா.

இந்திய ட்ரோன் துறை வரும் 2026-க்குள் ரூ.15,000 கோடி விற்றுமுதலை எட்டும் என அவா் ஏற்கெனவே கடந்த ஆண்டு செப்டம்பரில் கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT