முகப்பு
இந்தியா

உக்ரைன் - ரஷியாவைப் போன்றது மத்திய, மாநில அரசு உறவு: ஜார்கண்ட் முதல்வர்

மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு உக்ரைன் - ரஷியாவைப் போன்றது என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:13 AM
பகிர்:


ராஞ்சி: மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு உக்ரைன் - ரஷியாவைப் போன்றது என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய முதல்வர் ஹேமந்த் சோரன், ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட மாநில அரசை கவிழ்க்க மத்திய அரசு திட்டமிட்டு பிரசாரம் செய்து வருகிறது. இதனை உக்ரைனிலிருந்து ராணுவப் படைகளை ஆழித்து ஆக்கிரமிக்கும் ரஷியாவின் முயற்சிக்கு இணையாக ஒப்பிடலாம். 

ஓரிரு நாள்களில் உக்ரைனை வீழ்த்தி கைப்பற்றிவிடலாம் என்று ரஷியா நினைத்தது. ஆனால் உக்ரைன் தக்க பதிலடி கொடுத்து வருவதால் மூன்று மாதங்களாக போர் நீடித்து வருகிறது. 

பொய்யான தரவுகளைக் கூறி ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட மாநில அரசை நீக்கிவிடலாம் என்று மோடி தலைமையிலான அரசு நினைக்கிறது. இது முற்றிலும் தவறானது. நாங்கள் பதிலடி கொடுக்க உள்ளோம். கோழைகள் போன்று ஓடமாட்டோம் என்று தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →