மத்தியப் பிரதேசம் : தேசிய புலனாய்வு முகமை நிறுவப்படுமென மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தேசிய புலானாய்வு முகமை (National Investigation Agency, NIA) இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை எதிர்க்க இந்திய அரசால் ஒன்றிய அளவில் நிறுவப்பட்டுள்ள ஓர் புலனாய்வு அமைப்பாகும். பல மாநிலங்களின் ஊடாக நடைபெறும் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை எதிர்கொள்ள மாநிலங்களின் அனுமதிக்காகக் காத்திராது செயலாற்ற தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2008 மும்பை தாக்குதல்களை அடுத்து இந்த அமைப்பை உருவாக்கிட வழி செய்யும் தேசிய புலனாய்வு முகமை மசோதா திசம்பர் 16, 2008ஆம் ஆண்டு நடுவண் உள்துறை அமைச்சரால் நாடாளுமன்றத்தில் வழிமொழியப்பட்டது.
தற்போது தேசிய புலனாய்வு முகமை, விரைவில் மத்திய பிரதேசத்தில் நிறுவப்படுமென மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.