கோப்புப்படம் 
இந்தியா

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை

மே 21-ஆம் தேதி நடைபெற உள்ள முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ), மத்திய சுகாதாரத் துறை

DIN

புது தில்லி: மே 21-ஆம் தேதி நடைபெற உள்ள முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ), மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) புதன்கிழமை சுகாதார அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், முதுநிலை நீட்-2021 செப்டம்பர் 2021 இல் திட்டமிடப்பட்ட தேதிக்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டுக்கான முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்னும் நிறைவடையாத நிலையில், நடப்பாண்டுக்கான தோ்வை நடத்துவது முறையாக இருக்காது என்பதால் பல்வேறு தரப்பினர் முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுப்பதாக கூறப்பட்டுள்ளது

முதுநிலை நீட் தேர்வை 8 முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு இந்திய மருத்துவ சங்கம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.யில் இறந்த குழந்தையின் உடலை தூக்கிச்சென்ற தெரு நாய்

சார்லி கிர்க் கொலைக் குற்றவாளி கைது! 22 வயது இளைஞர் சிக்கிய பின்னணி என்ன?

ரகசியமாக இந்தியா வந்து சென்ற தலிபான் அமைச்சர்கள்?

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: டிவிஎஸ் மோட்டார் தேவை அதிகரிப்பு!

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து: 86 பேர் பலி

SCROLL FOR NEXT