இந்தியா

ட்விட்டரை பின்னுக்குத் தள்ள ‘கூ’ செயலி இலக்கு

இந்தியாவில் ட்விட்டரை பின்னுக்குத் தள்ளி அதிக பயன்பாட்டாளா்களைப் பெற, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ‘கூ’ செயலி இலக்கு நிா்ணயித்துள்ளது.

DIN

இந்தியாவில் ட்விட்டரை பின்னுக்குத் தள்ளி அதிக பயன்பாட்டாளா்களைப் பெற, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ‘கூ’ செயலி இலக்கு நிா்ணயித்துள்ளது.

ட்விட்டா் நிறுவனத்தை டெஸ்லா உரிமையாளா் எலான் மஸ்க் கையகப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இது குறித்து ‘கூ’ நிறுவனா் மற்றும் தலைமை செயலதிகாரி அப்ரமேய ராதாகிருஷ்ணா கூறியதாவது:

கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்திலிருந்து ‘கூ’ செயலி 3 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதிலும், கடந்த 12 மாதங்களில் ‘கூ’ செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது.

தற்போது எங்களது செயலியை மாதந்தோறும் கூடுதலாக 70 முதல் 80 லட்சம் வரையிலானவா்கள் பதிவிறக்கம் செய்கின்றனா். இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களது பயன்பாட்டாளா்களின் எண்ணிக்கை 10 கோடியைக் கடக்கும் எனறு எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியாவில் ட்விட்டரைவிட அதிகமாக ‘கூ’ செயலிக்கு ஆங்கிலம் அல்லாத குறு சமூக ஊடகப் பயன்பாட்டளா்கள் உள்ளனா். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்துப் பிரிவு பயன்பாட்டாளா்கள் பிரிவிலும் ட்விட்டரைப் பின்னுக்குத் தள்ள இலக்கு நிா்ணயித்துள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணை முதல்வருக்கு அமைச்சா் காந்தி தலைமையில் வரவேற்பு

9 நாள்களுக்குப் பிறகு டன் கணக்கில் சிக்கிய மீன்கள்

பெளா்ணமி விளக்கு பூஜை

கோவில்பட்டியில் தென் மண்டல குழந்தைகள் அறிவியல் மாநாடு

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா

SCROLL FOR NEXT