இந்தியா

நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: சோனியா காந்தி

DIN

உதய்பூர்: காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் 9 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில்  காங்கிரஸ் கட்சியின்  இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியதாவது:

மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் நாட்டின் பன்முகத் தன்மைக்கும், ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜனநாயகத்துக்கு குரல் கொடுப்பவர்கள் விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தப்படுகின்றனர். பிரதமர் மோடியும், அவரைச் சார்ந்தவர்களும் அதிகபட்ச நிர்வாகம், குறைந்தபட்ச அரசு என்ற முழக்கத்தை  முன்வைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

நாட்டில் சமமான குடிமக்களாக இருக்கும் சிறுபான்மையினரை மிருகத்தனமாக நடத்துகிறார்கள் என்று சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.

அடுத்த சில நாள்களில் ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெறும் கூட்டத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட 400-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கலந்துரையாடல்களில் பங்கேற்க உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT