இந்தியா

தில்லி தீ விபத்து: 2 பேர் கைது; கட்டட உரிமையாளர் தலைமறைவு

DIN

தில்லி: தில்லி தீ விபத்து தொடர்பாக 2 பேரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கட்டட உரிமையாளர் தலைமறைவானதைத் தொடந்து அவரை தேடும் பணியில் தில்லி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் கடுமையாகப் போராடி இரவு 10.30 மணிக்குத் தீயை அணைத்தனர்.

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சம்பவ இடத்துக்கு இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டனர்.

கட்டடத்தின் உரிமையாளர்களான ஹரிஷ் கோயல் மற்றும் வருண் கோயல் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். கட்டிடத்தின் மேல் தளத்தில் வசித்து வந்த கட்டட உரிமையாளர் மணீஷ் லக்ரா என்பவர் தலைமறைவானார். தொடந்து அவரை தேடும் பணியில் தில்லி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27-இல் இருந்து சற்று முன்பு 30 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT