இந்தியா

தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்பு

DIN


இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக நிதித் துறை முன்னாள் செயலர் ராஜீவ் குமார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா சனிக்கிழமை மாலை ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ராஜீவ் குமார் இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்பு கடந்த செப்டம்பர் 1, 2020 முதல் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்து வந்தார்.

ராஜீவ் குமார் பணிக் காலத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. 

ஆந்திரம், அருணாசல பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் இவரது பணிக் காலத்திலேயே நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

SCROLL FOR NEXT