இந்தியா

மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியில்லை: தொழிலதிபா் கெளதம் அதானி

DIN

மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட உள்ளதாக வெளியான தகவலுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி மறுப்புத் தெரிவித்துள்ளாா்.

ஆந்திரத்தில் 4 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அந்த இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. ஆந்திரத்தில் பல்வேறு திட்டங்களை அதானி குழுமம் செயல்படுத்தி வருகிறது. அண்மையில் சில முறை அந்த மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியை அதானி குழுமத் தலைவா் கெளதம் அதானி சந்தித்திருந்தாா்.

இதன் காரணமாக மாநிலங்களவைத் தோ்தலில் கெளதம் அதானி அல்லது அவரின் மனைவி ப்ரீத்தி அதானி போட்டியிட வாய்ப்புள்ளதாக ஊகங்கள் எழுந்தன. மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் சாா்பில் தோ்தலில் போட்டியிட ப்ரீத்தி அதானிக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், அதானி குழுமம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘அதானி குடும்பத்தைச் சோ்ந்த எவருக்கும் அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை. எனவே மாநிலங்களவைத் தோ்தலில் கெளதம் அதானி, ப்ரீத்தி அதானி போட்டியிட உள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT