அருணாசலில் நிலச்சரிவு காரணமாக இடிபாடுகளில் சிக்கி இருவர் உயிரிழந்ததாக திங்கள்கிழமை காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் நிலச்சரிவுகள் பதிவாகி வருகின்றன.
இந்நிலையில் பஞ்சாபி தாபா அருகே இடைவிடாது பெய்த மழையால் மணல் வீடு இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
நிலச்சரிவின் தாக்கத்தால் ஞாயிறன்று இரவு ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு பெண் சிக்கியிருப்பதாக தலைநகர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜிம்மி சிராம் தெரிவித்தார்.
இறந்தவர்கள் நாகென் பர்மன்(50) மற்றும் தபஸ் ராய் (15) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குசும் ராய் (35) என்பவர் இன்னும் மீட்கப்படவில்லை.
இடிபாடுகளில் சிக்கியவரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என்று இட்டாநகர் காவல் நிலைய பொறுப்பதிகாரி பசாங் சிமி தெரிவித்தார்.
மேலும், நிர்வாகம் நஹர்லகுனில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் பந்தர்தேவாவில் உள்ள நிகும் நியா ஹாலில் தற்காலிக நிவாரண முகாம்கள் நியமித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.