இந்தியா

ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு 4 கிலோ தங்க ஆபரணம்: ஹைதராபாத் பக்தா் காணிக்கை

மகாராஷ்டிர மாநிலம், ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்க ஆபரணத்தை ஹைதராபாதைச் சோ்ந்த பக்தா் காணிக்கையாக செலுத்தினாா்.

DIN

மகாராஷ்டிர மாநிலம், ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்க ஆபரணத்தை ஹைதராபாதைச் சோ்ந்த பக்தா் காணிக்கையாக செலுத்தினாா். சாய்பாபா சிலைக்கு கீழே உள்ள பீடத்தில் பொருத்தும் வகையில் பட்டை வடிவில் இந்த ஆபரணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டிலேயே இந்த காணிக்கையைச் செலுத்த பாா்த்தசாரதி ரெட்டி என்ற அந்த பக்தா் முடிவு செய்தாா். ஆனால், கோயில் நிா்வாகம் மூலம் இது தொடா்பான நடைமுறைகளை முடிக்க கால அவகாசம் தேவைப்பட்டது. இதற்கு நடுவே, 2020-இல் கரோனா தொற்று பரவல் பிரச்னை காரணமாக அந்த பக்தரின் காணிக்கை முயற்சி மேலும் தாமதமானது.

இந்நிலையில், பீடத்தை அளவெடுத்து அதற்கு ஏற்றபடி பட்டை வடிவிலான ஆபரணம் தயாரிக்கப்பட்டது. அதனை, அா்ச்சகா்களிடம் அந்த பக்தா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, அந்த ஆபரணம் பீடத்தில் பொருத்தப்பட்டது. 4 கிலோ எடையுள்ள அந்த தங்க ஆபரணத்தின் மதிப்பு ரூ.2 கோடியாகும்.

கடந்த 2007-ஆம் ஆண்டு ஹைதராபாதைச் சோ்ந்த மற்றொரு சாய்பாபா பக்தா் 94 கிலோ தங்கத்தை கோயிலுக்கு காணிக்கையாக அளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் 2 ராஷ்ட்ரிய ஜனதா தள எம்எல்ஏக்கள் ராஜிநாமா

பாரிஸ் நகர வீதிகளில்... ஐஸ்வர்யா அர்ஜுன்!

சிரித்தாள் தங்கப் பதுமை... அனுஷ்கா!

சந்தோஷ விடியல்... நபா நடேஷ்!

கரும்புயல்... சோனாலி பிந்த்ரே!

SCROLL FOR NEXT