இந்தியா

தில்லி உயர்நீதிமன்றத்தில் 9 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

DIN

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 3 பெண்கள் உள்பட 9 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக தாரா விட்டஸ்டா கஞ்சு, மினி புஷ்கர்ணா, மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா, விகாஸ் மகாஜன், துஷார் ராவ் கெடேலா, சச்சின் தத்தா, அமித் மகாஜன், கௌரங் காந்த் மற்றும் சௌரப் பெனார்ஜி ஆகியோருக்கு தற்காலிக தலைமை நீதிபதி விபின் சங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

இதையடுத்து தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. 

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 9 வழக்குரைஞர்களின் பெயர்களை மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது.

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பல வழக்குரைஞர்களை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT