கோப்புப்படம் 
இந்தியா

ஜம்முவில் கஞ்சா வைத்திருந்த பெண் உட்பட 2 பேர் கைது

ஜம்முவில் கஞ்சா வைத்திருந்த பெண் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

DIN

ஜம்முவில் கஞ்சா வைத்திருந்த பெண் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் காவல்துறையினர் 4 கிலோ கஞ்சா மற்றும் 4,49,000 பணத்தினை கைப்பற்றினர். ராஜீவ் நகரில் உள்ள நர்வால் பகுதியில் வழக்கமான  ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் துறை, சந்தேகத்தின் பேரில் இருவரை சுற்றி வளைத்தது. அதன்பின் சோதனையில் அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்த பூபி மற்றும் ஆஷா என்பது விசாரணையில் தெரிய வந்தது. பூபியின் மீது ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் காவல்நிலையத்தில் பதியப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. 

மேலும், இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச டி20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ‘திடீர்’ ஓய்வு!

6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! - முதல்வர் ஸ்டாலின்

முதல்வரின் ஜெர்மனி பயணம்: நயினார் நாகேந்திரனுக்கு டிஆர்பி ராஜா பதில்!

உயரும் யமுனை நீா் மட்டம்: கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT