இந்தியா

கர்நாடகத்தில் 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

கர்நாடக மாநிலத்தில் 10-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிட உள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

DIN

கர்நாடக மாநிலத்தில் 10-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிட உள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

மாநிலத்தில் ஹிஜாப் சர்ச்சைக்கு மத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் சுமார் 8.73 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வெழுதினர். 

இதற்கான தேர்வு முடிவுகள் இன்று மதியம் 1 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களில் தேர்வு முடிவுகளைப் பெற்றுகொள்ளலாம்.

கரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாக வழக்கமான முறையில் தேர்வுகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். மாநிலம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT