இந்தியா

'மிஷன் சக்தி' திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: ஒடிசா அரசு

DIN

ஒடிசா: முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா மாநில அமைச்சரவை 'மிஷன் சக்தி' திட்டத்தை 2022-23 நிதியாண்டு முதல் 2026-27 நிதியாண்டு வரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.4973.39 கோடி ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சுய உதவி இயக்கத்தை விரிவுபடுத்துதல், மாநிலம் முழுவதும் சுயஉதவி இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளை வலுப்படுத்துதல், பெண்களுக்கான வாழ்வாதார முயற்சிகளை வலுப்படுத்துதல், நிதிச் சேர்க்கையை ஆழமாக்குதல் போன்றவற்றுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கான நோக்கத்துடன் இத்திட்டத்தின் விரிவாக்கம் வந்துள்ளது. இதனால் சுய உதவிக்குழுக்கள் கடன் பெறுகின்றன என்று மாநில அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​மாநிலத்தில் 6.02 லட்சத்திற்கும் அதிகமான சுயஉதவி குழுக்களில் சுமார் 70 லட்சம் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

'மிஷன் சக்தி' திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அரசாங்கம் சில இலக்குகளை நிர்ணயித்துள்ளது, இதில் ஐந்தாண்டுகளில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.50,000 கோடி வங்கிக் கடன், கடனில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,200 கோடிக்கும் அதிகமான வட்டி மானியம் அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT