இந்தியா

கேரளத்தில் தொடரும் கனமழை: 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை

DIN

தென் மாநிலத்தில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் கேரளத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் நிற எச்சரிக்கை என்றால் 6 முதல் 11 செமீ வரை அதிக மழை பெய்யும்.

மேலும், மே 20 முதல் மே 22 வரை கேரளத்தில் ஓரிரு இடங்களில் கனமழை (24 மணி நேரத்தில் 7-11 செ.மீ.) பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இன்று முதல் இரண்டு நாள்களுக்கு கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கேரளத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால் தென் மாநிலத்தின் சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் எடவபதி என்றும் அழைக்கப்படும் தென்மேற்குப் பருவமழை, சாதாரண தொடக்கத் தேதியை விட, இந்தாண்டு ஐந்து நாள்களுக்கு முன்னதாக மே 27ஆம் தேதி துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT