ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் மென்பொருளை முடக்க முயற்சி
பிரபல விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மென்பொருளை முடக்க முயற்சி நடைபெற்றுள்ளது.
பிரபல விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மென்பொருளை முடக்க முயற்சி நடைபெற்றுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவன மென்பொருளை நேற்றிரவு ‘ஹேக்’ செய்ய முயற்சி நடந்ததாகவும் ‘ரேன்சம்வேர்’ வகையிலான இத்தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக ஸ்பைஸ்ஜெட் ஐடி ஊழியர்கள் அந்த முயற்சியை முறியடித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்னை காரணமாக, காலையில் செல்ல இருந்த விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றனர்.
Advertisement
Advertisement
’ரேன்சம்வேர்’ தாக்குதல் என்பது குறிப்பிட்ட நிறுவனத்தின் மென்பொருளை தாக்கி அது தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் கணினிகளிலுள்ள முக்கியமான தகவல்களை ஹேக் செய்துவிடுவார்கள். அந்த தகவல்களை மீட்க வேண்டுமென்றால் தங்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என ஹேக்கர்கள் மிரட்டுவார்கள்.
இதுமாதிரியான சிக்கல்களை பெரிய நிறுவனங்கள் சமாளித்தாலும் சிலர் பணத்தை செலுத்தியே தகவல்களை மீட்பார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.