இந்தியா

என் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்குத் தண்டனையை ஏற்பேன்: யாசின் மாலிக்

DIN

புது தில்லி: என் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்குத் தண்டனையை ஏற்றுக்கொள்வேன் என்று ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் என்ஐஏ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் புதன்கிழமை என்ஐஏ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிறப்பு என்ஐஏ நீதிபதி பிரவீன் சிங் விசாரணையின் போது, மாலிக் கூறியது "நான் எதற்காகவும் பிச்சை எடுக்க மாட்டேன், இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, அதை நீதிமன்றத்திற்கு விட்டுவிடுகிறேன். 28 வருடங்களில் நான் ஏதேனும் தீவிரவாதச் செயலிலோ அல்லது வன்முறையிலோ ஈடுபட்டிருந்தால், இந்திய உளவுத்துறை நிரூபித்தால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். தூக்குத் தண்டனையை ஏற்றுக்கொள்வேன்" என்று கூறினார்.

குற்றவாளி யாசின் மாலிக்கிற்கு இன்று மாலை தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.

இதையடுத்து, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என தில்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் மே 10 தீர்ப்பு வழங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT