இந்தியா

தில்லியில் விளையாட்டுத் திடல்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்: அரவிந்த் கேஜரிவால்

தில்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து விளையாட்டுத் திடல்களும் இரவு 10 மணி வரை விளையாட்டு வீரர்களுக்காக திறந்திருக்கும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்தார்.

DIN

புது தில்லி: தில்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து விளையாட்டுத் திடல்களும் இரவு 10 மணி வரை விளையாட்டு வீரர்களுக்காக திறந்திருக்கும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் திடல்கள் மாலை 6 மணிக்கு மூடப்படுவதால் விளையாட்டு வீரர்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். எனவே தில்லி அரசின் கட்டிப்பாட்டில் உள்ள அனைத்து விளையாட்டுத் திடல்களும் இரவு 10 மணி வரை விளையாட்டு வீரர்களுக்காக திறந்திருக்கும் என்று அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ளார்.

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சுட்டுரையில் கூறியதாவது, "நள்ளிரவு வரை விளையாட விரும்பும் விளையாட்டு வீரர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சில விளையாட்டுத் திடல்கள் முன்கூட்டியே மூடப்படுவதாக செய்திகள் எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளன. எனவே தில்லி அரசின் அனைத்து விளையாட்டுத் திடல்களையும் இரவு 10 வரை திறந்திருக்க முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக புதுவை செயலா் அன்பழகனுக்கு சென்னையில் இதய அறுவை சிகிச்சை

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT