இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN


இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில்  இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தனர். 

வியாழன் இரவு 9 மணியளவில் அவந்திபோரின் அகன்சிபோரா பொதுப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து, சம்பவ இடத்தைச் சுற்றி வளைத்தனர். 

பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினர் அதற்கு பதிலடி கொடுத்தனர். அப்போது இரண்டு லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

உயிரிழந்த பயங்கரவாதிகள் ஹஃப்ரூ சதூரா, புட்காமில் வசிக்கும் ஷாஹித் முஷ்டாக் பட் மற்றும் புல்வாமாவின் ஹக்ரிபோராவில் வசிக்கும் பர்ஹான் ஹாபீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்திலிருந்து ஏ.கே ரைபிள், ஒரு பிஸ்டல் மற்றும் பிற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT