தொடரும் ஆணவக்கொலை: இளம்பெண்ணைக் கொன்று சொந்த குடும்பத்தினரே வெறிச்செயல் 
இந்தியா

தொடரும் ஆணவக்கொலை: இளம்பெண்ணைக் கொன்று சொந்த குடும்பத்தினரே வெறிச்செயல்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இஸ்லாமிய இளைஞரை திருமணம் செய்த இளம்பெண்ணை அப்பெண்ணின் குடும்பத்தினரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இஸ்லாமிய இளைஞரை திருமணம் செய்த இளம்பெண்ணை அப்பெண்ணின் குடும்பத்தினரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த நர்னூரை சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இளைஞனும் நீண்ட நாள்களாக பழகி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் ஒருவரை ஒருவர் விரும்பி காதலித்துள்ளனர். 

இந்தத் தகவலை அறிந்த ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டார் அப்பெண்ணை கண்டித்துள்ளனர். இதனிடையே இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக இருவீட்டார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் இளம்பெண்ணை அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனது பெற்றோர் வீட்டின் நீச்சல் குளத்தில் இளம்பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இளம்பெண் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதுதொடர்பாக அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மாற்று மதத்தவரை திருமணம் செய்த காரணத்திற்காக சொந்த குடும்பத்தினரே இளம்பெண்ணை  கொலை செய்ததை கண்டறிந்தனர். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வேற்று மதத்தவரை திருமணம் செய்த காரணத்திற்காக சொந்த குடும்பத்தினரே கொலை செய்த சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4கே தொழில்நுட்பத்தில் மறுவெளியீடாகும் தி காட்ஃபாதர் - மூன்று பாகங்கள்!

3டி ஆடியோ, 360 கோணத்தில் பாடல்கள்: விரைவில் வெளியாகிறது ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ்!

பாலியல் குற்றச்சாட்டில் எம்எல்ஏ இடைநீக்கம்: ‘பிற கட்சிகளுக்கு காங். முன்னுதாரணம்!' -வி.டி.சதீஷன்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.87.68 ஆக நிறைவு!

ஊஊஊ... வடிவேலுவுடனான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!

SCROLL FOR NEXT